நம்பிக்கையில்லா பிரேரணை; எதிர்ப்பது சு.கவுக்கு கடினம்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு சுதந்திரக்கட்சிக்கு கடினமான விடயம். அதற்கு எந்த நியாயமான காரணமும் கிடையாதென சுதந்திரக் கட்சி பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கட்சி என்ற ரீதியில் முடிவு எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் ​நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,இது அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ எதிரான பிரேரணை அல்ல என்றும் இந்த பிரேரணையின் பின்னர் புதிய அரசாங்கமொன்றை உருவாக்க இடமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்த நோக்கமும் சுதந்திரக்கட்சிக்கு கிடையாது. நல்லாட்சி உருவாக்கியவர்களுக்கே அரசில் மாற்றம் செய்ய முன்வருமாறு அழைப்பு விடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர்,

பிணை முறி தொடர்பில் கடந்த காலத்தில் நாம் முன்வைத்த விடயங்கள் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளது. இது தொடர்பில் எமது கட்சி தான் முதலில் முறையிட்டது. ஆணைக்குழு அமைக்கவும் நாம் தான் கோரினோம்.

2015 வரை காணப்பட்ட பொருளாதார நிலைமையை முறையாக முன்னேற்ற தவறிவிட்டோம். அந்த விடயமும் இந்த பிரேரணையில் உள்ளடக்கியுள்ளது.

இந்த பிரேரணை சு.க எதிர்ப்பது கஷ்டம். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மாற்றங்களை மேற்கொ ள்ள மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்கள். ஐ.தே.கவில் இருக்கும் பலர் கடந்த காலத்தில் தேவையான மாற்றங்களுக்கு முயன்றார்கள்.அது முடியவில்லை.

இந்த பிரேரணையில் அந்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பொருளதாரத்தை சீரமைத்தல், விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்தல் ,வடக்கு மக்களின் வேதனைகளுக்கு தீர்வு காணுதல், தேசிய நல்லிணக்கத்தை பாதுகாத்தல் என்பவற்றுக்கு பரந்து பட்ட அரசாங்கமொன்று அமைக்க இந்த பிரேரணை ஊடாக வாய்ப்பு ஏற்பட வேண்டும்.

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமருக்கு எதிராக பிரேரணை கொண்டுவர முடியாது.பிணை முறி மோசடிக்கு யார் பொறுப்பு என்பதை அடிப்படையாக வைத்தே இந்த பிரேரணை முன்வைக்கப் பட்டுள்ளது. அதற்கு பொறுப்பனவருக்கு எதிராகவே பிரேரணை முன்வைக்கப் பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக வாயில் திறந்துள்ளது.

இதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சி என்ற ரீதியில் ஆழமாக ஆராய்ந்து வருகிறோம். ஜனாதிபதியுடனும் பேசிவருகிறோம். இந்த பிரேரணையை ஆதரிப்பதாக வெளிப்படையாக கூறுவது யாப்பிற்கு முரணானது.

அரசில் இருந்தவாறு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வாக்களிப்பதாக வெளியேறி வாக்களிப்பதாக என இன்னும் முடிவு செய்யவில்லை. எமது அமைச்சர்கள் சிலரும் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த பிரேரணை வெற்றிபெற ஆளும் தரப்பிலுள்ளவர்களும் வாக்களிக்க வேண்டும்.

நிதி அமைச்சு செயற்பாடுகளை மாற்றம் செய்ய ஜனாதிபதி முயன்றார். பல கட்சிகளின் கூட்டணியாக இந்த ஆட்சி உள்ள நிலையில் அமைச்சுக்களில் தலையீடு செய்து சர்வாதிகாரிபோல செயற்பட அவர் விரும்பவில்லை.

பிரேரணை தொடர்பில் 4 ஆம் திகதி காலையிலோ 3 ஆம் திகதி இரவிலோ முடிவு செய்யலாம்.

பாராளுமன்ற குழுவும் மத்திய குழுவும் ஒன்றாக கூடி முடிவு செய்யலாம்.

Share the Post

You May Also Like