16ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் பதவி விலகமுடிவு:நல்லாட்சி அரசாங்கம் தொடருமா?

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் அரசாங்கத்தின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமது பதவிகளில் இருந்து விலகுவதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தமது சுயகௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பதவிவிலகத் தீர்மானித்துள்ளபோதும் நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலைவகித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த விதமான அறிவிப்பையும் இதுவரை விடுக்கவில்லை.. இந்தநிலையில் நல்லாட்சி கூட்டணி அரசாங்கம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்து நடக்கக்கூடியவை:

1. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 15 ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் விலகினாலும் ஏனையவர்கள் இணைந்திருப்பதன் மூலமாக நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்தல்.

2. ஐக்கிய தேசியக்கட்சியையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் உள்ளடக்கிய நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக வெளியேறல். கூட்டணி அரசாங்கம் முடிவிற்கு வரும்.ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும்

 

Share the Post

You May Also Like