ஐ.தே.க. பொதுச் செயலாளராக அகிலவிராஜ்:தேசிய அமைப்பாளராக நவீன்

ஐக்கிய  தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக அகிலவிராச் காரியவசம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் தவிசாளராக கபீர் காஸிமும், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அலரி மாளிகையில்  நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியற்குழுக் கூட்டத்தின் போதே இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் உப தலைவராக ரவி கருணாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, பிரதித் தலைவராக தொடர்ந்தும் சஜித் பிரேமதாசவே பதவி வகிக்கவுள்ளார்.

இன்று கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளதோடு, ஏனைய பதவிகள் குறித்தும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளன.

Share the Post

You May Also Like