நாட்டுக்கு முன்னுரிமை அளியுங்கள் – இரா.சம்பந்தன்

தனிப்பட்ட அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை விடுத்து, நாட்டின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க, அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்…

முதலமைச்சர் வேட்பாளராக மாவை .சேனாதிராஜாவுக்கு பெருமளவில் ஆதரவு- சிறீதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியில், மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்….

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனை சந்தித்தார் சுவிஸ் நீதியமைச்சர்

சுவிஸ் நாட்டின் நீதியமைச்சர் ,எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தனை இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திருகோணமலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம், தமிழ் மக்களின்…

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு புத்தி கூற முற்படுவது குறித்து அமைச்சர் மனோ சிந்திக்கவேண்டும்

அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கிற்கு வந்து அரசியல் நிலமையைக் குழப்புவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்தி கூற நினைப்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும் என…

கெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி

EXCLUSIVE WITH SUMANTHIRAN – CAPITAL FM “ATHIKARAM” (14-07-2018)

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சபாநாயகரின் அறிவிப்பு இன்று

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (07) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை நேற்று…

போராட்டத்தில் ஈடுபடும் முல்லை மீனவர்களை சந்தித்தார் செல்வம் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தக் கோரி மீனவர்கள் மேற்கொண்ட போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தவண்ணமுள்ள நிலையில் நேற்று இரவு போராட்டம் மேற்கொண்டு வரும்…

குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா?

2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.   மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இறுதி யுத்தத்தின் போதான சர்வதேச குற்றங்கள் மீதான குற்றவியல் பொறுப்புக்கூறல் யோசனைக்கு ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்டஅமைச்சர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும்பான்மையான இலங்கை மக்களின் எதிர்ப்பையே பிரதிபலிப்பதாகதந்திரோபாயமாக சித்தரித்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் பிரதான பொதுத்தளத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக குற்றவியல் விசாரனை தொடர்பான யோசனை இயல்பாகவேவெளிநாட்டு கோட்பாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறாயினும் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் மிக ஆழமான சட்ட மற்றும் மத ரீதியிலானபாரம்பரியத்தினை கொண்டுள்ள அதேவேளை பாரிய இடைவெளிகள் நிலவும் நல்லினக்கம் மற்றும் மன்னித்தல் பற்றிய விடயங்களை பிரதிபலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நவீனமான முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டன என பல இடங்களில் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளன.ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஏகாதிபத்திய இராஜ்ஜியத்தின் கீழ் இம்முறைமை நடைமுறைக்கு வந்தது முதல் அது  அதிகார பிரிப்பு தொடர்பான கோட்பாட்டை முழுமையாகபிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக அரசன் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் (விதானைகள், மோஹட்டாலே, அதிகாரி, திசாவே) ஆகியோர் நீதி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும் இப்புராதன முறைமை சமூக ஒன்றினைப்புக்கள் மற்றும் சுமூக உறவுகள் என்ற அர்த்தத்துடன் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்திருக்கின்றது. கிராம சபை(Gamsabawa) என்ற அமைப்பு கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற சிறிய குற்றங்களை தவிர்ப்பதற்கு இலகுவான சமூக நட்புறவு செயற்பாடுகளை அங்கிகரித்து வந்துள்ளன. இலகுவான மற்றும்எளிமையான முன்னெடுப்புக்களின் நோக்கம் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலினூடாக மேலும் மேலும் விரோதங்களை வளரச்செய்யாமையாகும். அரச சபையாக கருதப்படும் உயர்சபையில் தற்கால நவீன குற்றவியல் விசாரனை முறைகளுக்கு சமமான வகையில் விசாரனைகள் நடைப்பெற்றுள்ளதென்பதனை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி இராச்சிய காலத்தின் போது « மகாநடுவ » என்ற சபையில் குற்றவியல் விசாரனைகள் குற்றம் புரிந்தவர் மீதே முதலில் வழக்கு தொடரப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது.   ஏற்கனவே குறிப்படப்பட்டுள்ள கோடிட்டுக்காட்டக்கூடிய கொள்கை முறையில் சந்தேகத்திறகிடமின்றி சமூக நீதி, சட்டத்தின் ஆட்சியில் வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹ(இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி) தனது ‘த லீகல் ஹெரிடேஜ் ஒப் ஶ்ரீ லங்கா’ (பக்கம் 33) என்ற நூலில் ஆரம்ப காலங்களிலிருந்த சில அரசர்களால் வரலாற்று குறிப்புக்கள்தர்மசாஸ்த்திரம் என்ற வழிகாட்டலுடன் பதிவுகளை செய்து வந்துள்ளன. அது புராதன அரசர்களை வழி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட சாஸ்த்திரங்களை உள்ளடக்கிய சபையாகும். சமூக நீதியை பாதுகாப்பதற்காக தண்டனைகளை அமுல்படுத்தல் மற்றும் ஆட்சியாளர் தவறும் பட்சத்தில் அவர் குற்றவாளியென அவருக்கு தண்டனையை வழங்கும் முறைமையைஏற்படுத்துதல் அரசின் கடமையென தர்மசாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் பெளத்தத்தை அரவனைத்து அதன் உள்நாட்டு நீதி நிர்வாக முறைமையைதயாரித்திருந்தாலும் அதன் ஏகாதிபத்திய தன்மையினை அது  நீர்த்துப்போகச்செய்யவில்லை. அநூராதபுரத்து கால முக்கிய பெளத்த ஆலய பனிகளின் போதும் (மஜ்ஜிம நிக்காய),பொலன்னறுவை காலத்து இலக்கிய சர்ச்சைகளின் போதும் (அமாவத்துர) இராச்சியம் மற்றும் பொது மக்களின் நலன்கருதியும் தண்டனை வழங்கல்கள் கட்டாயமானதாக காணப்பட்டுள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹவின் நூலின் அடிப்படையில் (பக்கம் 35) சட்ட ஆட்சி இருந்திருக்காவிடின் நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தினையும்ஏற்படுத்தியிருக்காது. தண்டனைகளினூடாக சட்ட ஆட்சியை பாதுகாத்தல் என்பது மதிப்புமிக்க நீதிமன்றம், தர்ம சபை (Dharma Sabha) மற்றும் தர்ம நீதிபதிகள் சமன்பாசாதிக்க (Samanpasadhikka) என அழைக்கப்பட்டது. மென்மேலும் சட்டத்திற்கு முன் சமத்துவமான கோட்பாடுகள் அந்த கால கட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் கடுமையாக அமூல்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதிA.R.B அமரசிங்ஹவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் மேலும் பல உதாரணங்களை வழங்கியுள்ளதுடன் பெளத்த துறவிகளாயிருந்தாலும் அவர்களும் இராஜ துரோக செயற்பாடுகள்முதல் படுகொலைகள் வரை கடும் தண்டனைக்குட்பட்டுள்ளனர்….

காரைதீவு பிரதேச சபையில் இன்று விஷேட சபை அமர்வு! -தவிசாளர் ஜெயசிறில்…

காரைதீவு பிரதேசசபையில் பதிலீட்டு அடிப்படையில் ஐந்து வருடங்களுக்கு மேல் கடமை புரியும் ஊழியர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு…

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வடக்குமாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் நேற்று (06.08) வழங்கிவைக்கப்பட்டன. மாகாணசபை உறுப்பினரின் 2018ம்ஆண்டுக்கான…