மைத்திரியின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி – கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் இலங்கைக்கு சர்வதேசத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்பு மிக முக்கிய பங்குவகித்தன.

அத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்காரணமாக பல சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனாதிபதி பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்ததாகவும், இதன்காரணமாகவே கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post

You May Also Like