கூட்டமைப்பு கோரும் அரசியல் கைதிகள் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்! – ரோஹித்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோரும், அரசியல் கைதிகள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அன்று விடுதலைப் புலிகளை தோற்கடிக்க எமக்கு உதவி தேவைப்பட்டது. அதற்காக பிள்ளையான் , கருணா ஆகியோரை இணைத்துக் கொண்டோம். இது ஒரு போர் வியூகம்.

ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஆயுதத்தினை கைவிட்டு ஜனநாயக வழிக்கு மாறினார்கள். அவர்கள் எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட்டார்கள்.

இன்று கூட்டமைப்பினர் விடுவிக்க கோருபவர்கள் நாட்டிற்கு ஆபத்தானவர்கள். அவர்கள் இறுதிவரையில் ஆயுதமேந்தி, களமாடி எமது இராணுவத்தினரை அழித்தவர்கள். அவர்களை விடுவிப்பது ஆபத்தானது.

இன்று வவுணதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவீரர் தின நிகழ்வுகளைத் தடுத்த காரணத்தால் தான் அவர்கள் கொலைச் செய்யப்பட்டார்கள்.

கடந்த வருடங்களில் மாவீர் தின நிகழ்வுகள், அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. இந்த முறை அது தடுக்கப்படடுள்ளது. அதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share the Post

You May Also Like