கோம்பாவில் தளிர் முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிப்பளிப்பு.

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், தளிர் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, கடந்த வாரம் தளிர் முன்பள்ளியில், முன்பள்ளியின் முதன்மையாசிரியர்  தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு சிறி துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட வளிபாடுகளுடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து விருந்தினர் வரவேற்பு, இறை வணக்கம், மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரை, சிறார்களது கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

அதனையடுத்து எதிர் வரும் 2019ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லும் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், புதுக்குடியிருப்புப் பிரதேசசபையின உப தலைவர் க.சனமேசயந், க.விமல் (சிறுவர்நிதியம், முன்பள்ளி திட்ட முகாமையாளர்), அ.அயந்தன் (திட்ட உத்தியோகத்தர், சிறுவர் நிதியம்)ஆகியோருடன் முன்பள்ளி ஆசிரியர்கள், சிறார்கள், சிறார்களின் பெறறோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like