நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ்

ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சுக்கு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்த பின்­ன­ணி ­யில், நாட்­டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் சுட்­டுக்­கொல்­லப் பட்­டுள்­ள­தாக நாம் கரு­து­கின்­றோம்.

  • இவ்­வாறு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன் தெரி­வித்­துள்ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று இடம்­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு கிழக்­கில் உள்ள முன்­னாள் போரா­ளி­களை அச்­சு­றுத்­தும் வகை­யி­லும், அவர்­க­ளின் சாதா­ரண வாழ்க்­கை­யைக் கண்­கா­ணிக்­கும் வகை­யி­லும் புல­னாய்வு பிரி­வி­னர் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

வவு­ண­தீ­வுச் சம்­ப­வம் கண்­டிக்­கப்­பட வேண்­டி­யது. இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் கைது செய்­யப்­பட வேண்­டும்.

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்­றக் குழு கடி­தம் மூலம் அறி­வித்த பின்­னர் இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றுள்­ளது. நாட்­டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே இது இடம்­பெற்­றி­ருக்­க­லாம் என்று கரு­து­கின்­றோம் – என்­றார்.

Share the Post

You May Also Like