கூட்டமைப்பின் இனிவரும் நகர்வுகள்: தன் ஆதரவாளர்களுக்கு சுமன் விளக்கம்!

நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது எவ்வாறு சாதுர்யம், சாணக்கியம் என்பவற்றுடன் கூட்டமைப்பு தன் நகர்வுகளை மேற்கொண்டது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள், இனிவரும் காலங்களின் கூட்டமைப்பின் நகர்வுகள் என்பன தொடர்பில் தனது கடும் ஆதரவாளர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் விளக்கினார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள ஈ.சிற்றி ஆக்கிலக் கல்லூரியில் சுமந்திரனின் ஆதரவாளர்கள் அவரை நீண்டநாள்களுக்குப் பின்னர் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தச் சந்திப்பில் சுமந்திரனின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஆதரவாளர்கள், கூட்டமைப்பின் கடந்தகால நகர்வுகள், இனிமேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலான மாபெரும் சந்திப்பு ஒன்றை சுமந்திரன் நடத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு சுமந்திரன் ஜனவரி 5 ஆம் திகதி அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

Share the Post

You May Also Like