காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து, வடக்கு கிழக்கில் எதிர்வரும் 25ஆம் திகதி, ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டமென்றையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், குறித்த போராட்டத்திற்கும் ஹர்த்தால் அழைப்புக்கும் தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் நியாயபூர்வமானதுடன் அது நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share the Post

You May Also Like