தந்தையின் ஜனன தினத்தில் மட்டு வாலிபர் இரத்த தானம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சிலையருகில் ஜனன தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மட்டு.பிரதேசசபையின் தவிசாளர்கள், மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி உறுப்பினர்கள், கட்சி முக்கிஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வுகளை தொடர்ந்து, தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் ஆர்.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கட்சி முக்கிஸ்தர்கள், வாலிப முன்னணி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் இந்த  இரத்ததான நிகழவினை நடத்தினர்.

 

Share the Post

You May Also Like