முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தீவக கிளையின் தலைவர் கருணாகரன் குணாளனின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் புங்குடுதீவு குறிகாட்டுவான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மவர்த்தன , தீவக சிவில் சமூக உப செயலாளர் சபா . பரமேஸ்வரன் , தமிழ் அரசுக்கட்சியின் ஊர்காவற்துறை மூலக்கிளையினர், தஇலங்கை தமிழரசுக் கட்சியின் தீவக வாலிப முன்னணியினர், சங்கானை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சனசமூக நிலையப் பிரதிநிதிகள் , விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

  

 

Share the Post

You May Also Like