யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதுடன், காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் திணைக்கள உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத்தலைவர், சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், த.சித்தார்தன், ஈ.சரவணபவன் யாழ் மாநகர முதல்வர் இ.ஆனொல்ட், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like