விடுதலைப் போரில் கையிழந்தவர்களுக்கான கணிணி சான்றிதழ்களை வழங்கினார் சுமன்!

வெற்றிலைக்கேணி உலக உலா கணனி கற்றல் வளநிலையம், விடுதலைப்போராட்டத்தில் இரண்டு கைகளையும் இழந்து கால்களினால் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்று பூர்த்திசெய்த  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் கடந்த 7 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிலையம் அமைப்பதற்கான நிதியை நாடாளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளையினர் வழங்கியிருந்தனர்.

இந்த கற்றல் வள நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரும் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் கால்களினாலேயே தட்டச்சை மேற்கொள்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like