வறுமையில் உள்ள குடும்பத்துக்கு நல்லின ஆடுகள்; வழங்கினார் புதிய சுதந்திரன் இயக்குநர் அகிலன்!

புதிய சுதந்திரன் பத்திரிகை நிர்வாக  இயக்குநரும் மனிதநேய செயற்பாட்டாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி வறுமைக்கோட்டின்கீழ் வாழும்  குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்காக நல்லின ஆடுகளை வழங்கியுள்ளார்.

அகிலன் முத்துக்குமாரசுவாமி மிகவும், வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்கள், வளம்குறைந்த பாடசாலைகள் என்பனவற்றுக்கு  மாதாந்த செயற்றிட்டத்தின் ஊடாக ஒவ்வொரு மாதத்துக்கும் உதவித்திட்டங்களைத் தனது சொந்த நிதியில் வழங்கி வருகின்றார். அந்தவகையில், சித்திரைமாத செயற்றிட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கொடிகாமம் வெள்ளம்போக்கட்டி மற்றும் அல்லாரையைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நல்லின ஆடுகளை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் சி.ஹரிகரனும் கலந்துகொண்டார்.

Share the Post

You May Also Like