சுமந்திரனின் அரசியல் செல்வாக்கு உயர்ந்திடுமென அஞ்சி மாணவர் கைதில் சித்து விளையாடும் சட்டத்தரணிகள்!

மின்னல்

மிழ்த் தேசியக் கூட்டமைப்பி்ன் நாடாளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்..சுமந்திரன் அவரது அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்.  அவரது அரசியல் சாணக்கியம், சட்ட நிபுணத்துவம்வாதத்திறமை இவற்றால் அவரது செல்வாக்கும்  புகழும் மேலும் உயர்ந்து விடுமோ என அவரது அரசியல் எதிரிகள்,குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியும் அதன்  சட்டத்தரணிகளும் காழ்ப்புணர்ச்சி பாராட்டுகிறார்கள்.  காகம் கத்தி மாடு சாவதில்லை என்ற பழமொழி இவர்களுக்குத் தெரியவில்லை போலும்.

பிந்திக் கிடைத்த செய்தியின்படி பிரதி சட்டமா அதிபர் குறிப்பிட்ட மூவரும் பிணையில் செல்ல இவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம்அந்தச் சட்டத்தின் கீழ் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சில சட்டவிதிகள்அவசரகாலச் சட்டம், அரசியல் – சிவில் உரிமைகளுக்கான சர்வதேசப் பட்டயச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்குப் பிணை வழங்கும்படி கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனவாயினும்அந்தப் பிணைக் கோரிக்கைக்கு அரசுத் தரப்பு ஆட்சேபனை தெரிவித்ததால்அதனை மீறி பிணை வழங்கும் நியாயாதிக்கம் நீதிவான் நீதிமன்றுக்கு இல்லை எனத் தெரிவித்துபிணை மனுக்களை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.இந்தக் கைதுகளையும்விளக்கமறியலையும் ஆட்சேபித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து சட்டமா அதிபரை நேரில் சந்தித்தும் அதனை வற்புறுத்தினார்.அவர் இரண்டு விடயங்களைக் கோரியிருந்தார். ஒன்று – இந்த வழக்கில் விடயம் இல்லாததால் மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்தது – முதலாவது கோரிக்கையை உடனடியாக நிறைவு செய்ய முடியாவிட்டால் குறைந்த பட்சம் மூவரையும் பிணையில் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவிநேற்று மாலை தொலைபேசி மூலம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்டார்.பின்வரும் விடயங்களை சட்டமா அதிபர் அலுவலகம்சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.

1.. சட்டமா அதிபரின் முடிவு சுமந்திரனுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2. மேற்படி மூவருக்கும் எதிரான வழக்குகளை முற்றாகக்கைவிடக் கோரும் சுமந்திரனின் முதலாவது கோரிக்கை இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது. அது குறித்துப் பின்னர் முடிவு செய்யப்படும்.

3. மூவரையும் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதிப்பதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று சட்டமா அதிபர்சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான பக்ஸ் மூல பரிந்துரை மேற்று மாலையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

4. மேற்படி நால்வரும் நான்கு சட்டங்களின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ஒன்று – அரசியல்,சிவில் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டம். அந்தச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்படுவோருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றுக்குக் கிடையாது. மேல் நீதிமன்றத்துக்கே உண்டு.ஆகையினால், இந்த மூன்று பேர் விடயத்திலும் அந்த நான்காவது சட்டத்தின் கீழ் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்திய வாசகத்தை நீதிமன்றத்தில் விலக்கிக் கொள்ளுமாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகும் பொலிஸ் அதிகாரிக்கு சட்டமா அதிபர் வழிகாட்டல் வழங்கியுள்ளார். ஆகவே இன்று வியாழக்கிழமை இந்த விடயம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது மேற்படி நான்காவதுசட்டம் பற்றிய வாசகம் பி அறிக்கையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்.

5. மற்றைய மூன்று சட்டங்களின் கீழ் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேகநபர்கள் விடயத்தில் அரசுத் தரப்பு (சட்டமா அதிபர் தரப்பு) ஆட்சேபனை தெரிவிக்காவிடின் அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க முடியும்.எனவேஇன்று வியாழக்கிழமை மேற்படி மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும்போது உங்களின் இரண்டாவது கோரிக்கைப்படிஅவர்களைப் பிணையில் விடுவிப்பதற்கு நீங்கள் விண்ணப்பித்து நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்.– இவ்வாறு சுமந்திரனுக்கு சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் உத்தியோகபூர்வ பதிலை வழங்கினார்.தமது சார்பில் தமது கனிஷ்ட சட்டத்தரணி கேசவன் சயந்தன் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகிமூவர் சார்பிலும் பிணை அனுமதிக் கோரிக்கையை முன்வைத்து அதனைப் பெற்றுக்கொள்வார் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் நவாவிக்குத் தெரியப்படுத்தினார்.

இனி இந்த விமர்சனத்தைப் படியுங்கள்!  (ஆசிரியர்

சட்ட வழக்குகள் பலவற்றில் பல விடயங்கள் திறந்த நீதிமன்றத்தில் நடக்கும். அதேசமயம் சில அம்சங்கள்திறந்த நீதிமன்றத் தில் – பகிரங்கமாக இடம்பெறாமல் – நகரும்.
அப்படி ஒரு விடயத்தை இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வடக்குகிழக்கைப் பொறுத்த வரை இப்போது அதிகம் பேசப்படும் – வாசகர்கள் அதிகம் கவனிக்கும் – வழக்குயாழ். பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் இருவர் உட்பட மூவர் யாழ்.
பல்கலைக்கழகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட விடயமாகும்.

நான்கு சட்டங்களின் கீழ் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று அவர்கள் பெரும் பாலும் பிணையில் விடுவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அதுபற்றிய செய்தி தனியாகப் பிரசுரமாகியுள்ளது.

மேற்படி நான்கு சட்டங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் ஒருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டால்சட்ட மா அதிபரின் இணக்கமின்றி நீதிவான் நீதிமன்றில் அவரைப் பிணையில் எடுப்பதற்கு இடமில்லை. அப்படி இருக்கையிலும் இந்த மூவர் விடயத்தில் நீதிவான் நீதிமன்றில் முதலில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசுத்தரப்பில் ஆஜரான பொலிஸார் பிணை அனுமதியை ஆட்சேபித்தனர். எதிர்பார்க்கப்பட்டபடி பிணை விண்ணப்பத்தை யாழ். நீதிவான் நீதிமன்று நிராகரித்தது.

அதுவல்ல விடயம்.

நீதிவான் நீதிமன்று பிணை அனுமதியை நிராகரித்த கையோடு,  அதற்கு எதிரான பிணை அனுமதிக்கான சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் சில தரப்புகளினால் அவசர அவசரமாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பிணை விண்ணப் பத்தை நேற்றுமுன்தினம் பரிசீலனைக்கு எடுத்த யாழ். நீதிபதிஇந்த விடயத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு (நாளை மறுதினம்) வியாழக்கிழமை நீதிவான் நீதிமன்றுக்கு வருகிறது. சட்ட மா அதிபரின் முடிவு பெரும்பாலும் அன்றைய தினம் தெரியவரும். வழக்கு முற்றாக விலக்கப்பட லாம். அல்லது பிணை அனுமதி வழங்கப்படலாம். அல்லது மறுக்கப்படலாம். எதுவும் வியாழனன்று தெரியவரும் என்ற நிலையில் இந்த அவசரம் எதற்கு?” – என்ற சாரப்பட நேற்றுமுன்தினம் மேல் நீதிமன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

இல்லைஇல்லைஇந்த விடயத்தை சில தரப்புகள் அரசியல் ரீதியாக சட்டமா அதிபருடன் ஊடாடியுள்ளன. அதனால் சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் தொடர்கின்றோம்” – என்ற சாரப்பட பிணை மனு கோரிய சட்டத்தரணிகள் தரப்பில் நீதி மன்றில் கூறப்பட்டதாம்.

அதை அரசுத் தரப்பில் – சட்டமா அதிபர் சார்பில் – ஆஜரான பெண் சட்டத்தரணி கடுமையாக ஆட்சேபித்தார். அப்படி யாரும் அரசியல் ரீதியாக சட்டமா அதிபரை அணுகவுமில்லையாருடனும் அரசியல் ரீதியாக இவ்விட யத்தை ஒட்டி சட்டமா அதிபர் கலந்துரையாடவுமில்லை – என்று அவர் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

மீண்டும் இந்தவிடயம் இன்று வியாழக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றுக்கு வருவதனால் அங்கு நடக்கும் விடயங்களை அவதானித்து மேல் நடவடிக்கை குறித்து ஆராயலாம் எனக் கருதிபிணை விண்ணப்ப மனு மீதான விசாரணையை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தது யாழ். மேல்நீதிமன்றம்.

இனிவிடயத்துக்கு வருவோம். மேற்படி யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் கைது தொடர்பான விடயத்தில் தங்களின் – யாழ். பல்கலைக்கழகத்தின் – உத்தியோகபூர்வ சட்டத்தரணியாகஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்து நியமித்திருக்கின்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி என்றவகையிலும்யாழ். பல்கலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி என்ற வகையிலும் சுமந்திரன் நடவடிக்கை எடுத்தார். பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சோர்ந்த இரு மாணவர் களையும்தேநீர்ச்சாலை உரிமையாளரையும் வழக்கிலிருந்து விடுவிக்கும் படியும்,உடனடியாக அத்தகைய தீர்மானம் ஒன்று எடுக்கப்படமுடியாவிட்டால்தமது கட்சிக்காரரான மூவரையும் பிணையில் விடுவிப்பதை நீதி மன்றத்தில் ஆட்சேபிக்காமல் இருக்கும்படியும்ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்சட்டமா அதிபருக்கு உத்தியோகபூர்வ மாகக் கடிதம் எழுதினார். அதன் பிரதியை அன்று மாலையே நாம் மின் அஞ்சலில் பெற்று செய்தி யாக்கியிருந்தோம்.

அந்தக் கடிதம் வரையப்பட்ட கடிதத் தலைப்பில் “ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்‘ என்றுதான் இருந்தது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் என்றோ அரசியல்வாதி என்றோ ஏதும் குறிப்பிடப்படவேயில்லை. இந்த விடயத்தை ஒட்டிவிளக்க மறியலில் இருக்கும் தனது கட்சிக்காரர்களின் சட்டத்தரணி என்ற முறையிலேயே சுமந்திரன் சட்டமா அதிபரைச் சந்தித்துப் பேசியுமிருந்தார்.

இதை ஏன் அரசியல் தலையீடாக அர்த்தம் பண்ண வேண்டும்அரசியலுக்கு வர முன்னரே மதிப்பார்ந்த சட்டத்தரணி சுமந்திரன். அவரது சட்டத்தரணி விற்பன்னத்தைதமது அரசியலுக்குரிய எதிரித்தனமாக சில தரப்புகள் ஏன் பார்க்க வேண்டும்அதுவும்மேற்படி மாணவர்களின் விடுதலைக்காக நீதிமன்றத்தில் துள்ளிக் குதிப்பவர்களைப் போலத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள்இந்த விடயத்தில் சட்டத்தரணி சுமந்திரனின் செயற்பாட்டை ஏன் அரசியலாகக் காட்டிஅந்த மாணவர்களின் பிணை அனுமதிக்குக் குறுக்கே போக வேண்டும்?

சரி. சுமந்திரன் செய்வது அரசியல்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதனால்விளக்கமறயலில் வாடும் மாணவதலைவர்களுக்கு விடுதலை அல்லது பிணையில் விடுவிப்புக் கிடைக்கும் என்றால்,கிடைத்து விட்டுப் போகட்டுமேஅதற்கு ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?

சுமந்திரன் தமது சட்ட விற்பன்னம் மற்றும் அதனால் சட்டத்துறையில் தமக்கு கிடைத்த உயர்ந்த மதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மூவருக்கும் பிணை அனுமதியோ அல்லது விடுதலையோ பெற்றுக் கொடுத்தால் அதனால் அவருக்கு அரசியல் செல்வாக்கு உயர்ந்து விடும் என்ற  காழ்ப்புணர்ச்சிதான் அதற்குக் குறுக்காக நிற்கும் மேற்படி சட்டவாதத்தின் நோக்கமோ…?

காரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும்.மாணவ தலைவர்களின் எதிர்கால நலனுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விடயம் இது. இதில் உங்கள் அரசியல் குசும்புத்தனத்தைக் காட்ட முயற்சிக்காமல் இருப்பதுதான் நீதி.சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிந்தால் சரி.

(காலைக்கதிர் 16-05-2019)

Share the Post

You May Also Like