ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாவையின் முயற்சியால் அம்புலன்ஸ்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மத்திய சுகாதார அமைச்சர் Dr ராஜித சேனாரத்ன அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய அதி நவீன Benz ரக நோயாளர் காவு வண்டி ( Ambulance) மத்திய சுகாதார அமைச்சால் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் உட்புறத்தில் குளிரூட்டப்பட்ட ஒரு அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கக் கூடிய சகல உபகரணங்களும் உள்ளமையால் அதிசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெறவேண்டிய அவசர நோயாளர்களை இலகு பயணம்மூலம் காவுவண்டியில் சகல வசதிகளும் உள்ளமையால் அவர்களின் உயிரைக் காக்கும்வகையில் வாகனத்துக்குள்ளே அவசர சிகிச்சைகளை மேற்கொண்ட வண்ணம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முடியும்.

ர்காவற்றுறைக்கு மட்டும் அல்லாது ஏனைய தீவுப் பகுதி வைத்தியசாலைகள், நெடுந்தீவு, நயினாதீவு வைத்தியசாலைகளில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அனலைதீவு, எழுவைதீவு வைத்தியசாலைகளில் இருந்து கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு வரும் நோயாளர்களையும் கொண்டு செல்ல தேவைப்படும் போது ஊர்காவற்றுறை நோயாளர் காவு வண்டியே சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.எனவே, இனிமேல் இச் சேவைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளக் கூடியதாக அமையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பெரும் முயற்சியால் பல உயிரிழப்புக்களைத் தடுக்கமுடியும் என்றும் தீவகம்வாழ் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like