முள்ளியவளை நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயிலைத் திறந்துவைத்தார் – ரவிகரன்.

முல்லைத்தீவு – முள்ளியவளை, செங்குந்தா வீதியில் அமைந்துள்ள நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயிலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன்அவர்கள் திறந்துவைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரவிகரன் அவர்களால் குறித்த நரசிம்ம வைரவர் கோவிலின்நுழைவாயில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் கோவிலின் நுழைவாயில் 31.05.2019 நேற்றைய நாள் ரவிகரன் அவர்களால் திறந்தவைக்கப்பட்டது. விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், அதனையடுத்து கோவிலினுடய நுழை வாயில் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் இன்றைய நாள் நரசிம்ம வைரவர் கோவிலினுடைய வருடாந்த பொங்கல் விழாவும், பூசைகளும் சிறப்பாக இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கோவில்நிர்வாகத்தினர், அடியவர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மும்முனை அரசியல் போரினாலே நாடு சீரழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார் தற்போது நடைபெறும் மும்முனை அரசியல் போரினாலே நாடு சீரழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே நாட்டின் நலன்கருதி மூன்று பெரும்பான்மை கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்…

ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது!

நக்கீரன் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி.  பொது பல சேனா  என்ற தீவிர  அடைப்படைவாத அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே…

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகளின் முதல்வர்கள் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10.00…

யாழ். நூலகம் எரிப்பு நினைவு நாள் – மாநகர சபையினால் நினைவுகூரல்!

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 38 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை…

ரிஷாட் தொடர்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முடிவெடுப்போம் – கூட்டமைப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையிலான ஒரு முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று…