இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் முதலாவது செயற் குழு கூட்டம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் முதலாவது செயற் குழு கூட்டம் தலைவர் சேயோன் தலைமயில்  யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள  கட்சியின்  தலமை காரியாலயத்தில் நேற்று 01.06.2019 பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
இவ் கூட்டத்தில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாலிபர் முன்னணியின் செயற்குழு உறுப்பினகளும் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.எக்ஸ். குலநாயகம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பரம்சோதி ஆகியோர் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்தினை பகிர்ந்து கொண்டனர்.
அதே வேளையில் வாலிபர் முன்னணியின் எதிர்கால நடவடிக்கை பற்றியும் நடைபெறவுள்ள கட்சியின் மாநாடு பற்றியும் வாலிபர் முன்னணியின் மூலக்கிளைகள் தொகுதிக்கிளைகள், மாவட்ட கிளைகள் அமைத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது அத்துடன் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றபட்டன.
இறுதியில் செயலாளரின் நன்றி உரையுடன் இனிதே முடிவடைந்தது.
Share the Post

You May Also Like