வலிகாமம் வடக்கில் மரம்நடுகைத் திட்டம் தவிசாளர் சுகிர்தனால் ஆரம்பித்து வைப்பு!

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் தமது பிரதேச எல்லைக்குள் உள்ள வீதிகளில் மரம் நடுகைத் திட்டத்தை மேற்கொண்டனர்.

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சுற்றாடல் பொதுவசதிகள் குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினருமான பாக்கியநாதன் மரியதாஸ் தலைமையில் இந்த மரம் நடுகை நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் கலந்து முதலாவது மரத்தை நட்டு, திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

Share the Post

You May Also Like