கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்துக்கு சிறிதரன் எம்.பியால் படகு, வாகனம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 2 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான படகுகளும் கையளிக்கப்பட்டன..

கிளாலி மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விளங்கக் கூடிய கடல்சார் தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கோடும், அவற்றை இலகுவாகச் சந்தைப்படுத்தும் இலக்கோடும்  நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் கிளாலி கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு 2மில்லியன் ரூபா பெறுமதியிலான வாகனமும், 3மில்லியன் ரூபா பெறுமதியான படகுத் தொகுதிகளும் கிளாலி கடற்றொழிலாளர் சங்கத் தலைவரிடமும், கடற்றொழிலாளர்களிடமும் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரூபாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்  தலைவர் சு.சுரேன் மற்றும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள், கிளாலி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள்,பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like