சாவகச்சேரியில் தண்ணீர் தாங்கி திறப்பு!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பிரிவில் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராமங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 523 படையணியின் ஐந்தாவது தொழில்நுட்ப அலகினரால் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறுகளுடன் இணைந்த தண்ணீர்த் தாங்கிகள் நேற்று  திறந்து வைக்கப்பட்டன.

51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் றொசான் செனிவிரத்ன, சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை  இராமநாதன் ஆகியோரால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் 52 படையணி கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.எஸ்.வடுகே  523 ஆவது படையணி கட்டளைத் தளபதி  கேர்ணல் டி.என்.ஜே.பெர்ணாண்டோ தென்மராட்சி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்கா மற்றும் பிரிவு கிராம அலுவலர் க.கார்த்திகேயன், நகரசபை உறுப்பினர்கள்  பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மகிழங்கேணிப் பகுதியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட கழிப்பறைகளைத் திறந்து வைக்க வருகை தந்திருந்த மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சியிடம் நகரசபை தவிசாளர் விடுத்த வேண்டுகோளையடுத்து மாவட்ட கட்டளைத் தளபதியின் ஏற்பாட்டில்  குழாய்க் கிணறுகளும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் தண்ணீர் தாங்கிகளும் நிர்மாணிக்க்ப்பட்டன எனவும் படையினரின் பொதுநல சேவைகள் செயற்றிட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழம் மக்களின் நலன் கருதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தனர்..

Share the Post

You May Also Like