வளர்மதி விளையாட்டு மைதான மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.

முல்லைத்தீவு – மன்னகண்டல் பகுதியில் அமைந்துள்ள, வளர்மதி விளையாட்டுக்கழக மைதான மறுசீரமைப்பு வேலைகளை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், 09.06.2019 நேற்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பரிந்துரையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களால் விசேட ஒதுக்கீட்டினூடாக மன்னகண்டல் வளர்மதி விளையாட்டுக்கழக மைதான மதிற்சுவர் அமைப்பதற்கு உரூபாய் 500,000.00 (ஐந்து இலட்சம்) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த விளையாட்டுக்கழக மைதானத்தினுடைய மறுசீரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு இடம்பெற்றுவரும் மறுசீரமைப்பு வேலைகளையே ரவிகரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதேவேளை விளையாட்டுக்கழக இளைஞர்களையும் சந்தித்து அவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார். 

இதில் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் கனகசுந்தரசுவாமி ஜனமேஜயந் அவர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like