கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி சிறிதரனால் புனரமைப்பு!

கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி 81 மில்லியன் ரூபா செலவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக புனரமைப்புக்கள் எதுவுமின்றி போக்கு வரத்துக்கு மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்ட பல லட்சம் மக்களின் உயிர்களையும் , உடைமைகளையும் பாதுகாத்து மக்கள் யாழ் குடாவிலிருந்து வன்னி நோக்கிய இடப்பெயர்வுக்கு பிரதான வீதியாக விளங்கிய கிளாலி பிரதான வீதி கடந்த காலப் போரின் போது இராணுவத்தினரின் முன்னரங்கப் போர்முனையாக இருந்து முழுமையாக சிதைவடைந்திருந்தது. இருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியால் இவ்வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருடன் மீள்குடியேற்ற,வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  சிவஞானசோதி மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் மற்றும் பச்சிலைப்பள்ளி,சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர்கள், பச்சிலைப்பள்ளி,சாவகச்சேரி பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like