வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகள் யுத்த காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன – அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகள் தற்போதை விட போர்க்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த கல்வித்துறை வீழ்ச்சி தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா – கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாணவர்களின் கல்வி தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக அகில இலங்கை ரீதியாக 9 ஆவது இடத்திலேயே நாம் இருக்கின்றோம்.

எனவே இந்த வீழ்ச்சி குறித்து மதிப்பீடு செய்து எப்படி முன்னேற்றுவது என அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் கேட்டுக்கொண்டார்.

Share the Post

You May Also Like