நல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ

செய்தி வெளியீடு / 10.06.19

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு  சபையின் பயங்கரவாதக் குழுவின் நிர்வாக இயக்குநரும் (CTED) உதவிப் துணைப் பொதுச்செயலாளரும் ஆன  செல்வி  மைக்கேல் கோனின்க்ஸ் நேற்று (ஜூன் 8, 2019) கொழும்பில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் திரு சம்பந்தனை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  பேரவையின்  தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சம்பந்தன் வலியுறுத்தினார்.  “இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது என்ற உண்மையை அது மறந்துவிட்டதாகத் தெரிகிறது.  அரசாங்கத்தின்  நடவடிக்கைகள்  அந்தத் தீர்மானத்தை செயல்படுத்துவதில்  மிக அரிதாகவே கவனம் செலுத்துகின்றன.  “இந்த நிலைமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லைஇது நாட்டிற்கு நல்லதல்லநிச்சயமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நல்லதல்ல”  என திரு சம்பந்தன் கூறினார்.

பன்னாட்டு  சமூகத்திற்கு எதையும் வாக்குறுதியாகக் கொடுக்க  முடியும்,  ஆனால்  தங்கள் விருப்பப்படி அந்த வாக்குறிதியை முற்றிலும் புறக்கணித்துவிட முடியும் என   ஒரு அரசாங்கம் நினைத்தால்அப்படியான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களின் இருப்புக்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கி விடும்” என்று திரு சம்பந்தன் கூறினார்.

மேலும் பேசிய  திரு சம்பந்தன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு  நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் முற்றிலுமாகக் கைவிட்டு விட்டது எனச் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை  அடைவதிலும் பின்னர் அது  தொடர்ச்சியாக  பேணப்படுவதையும்  கடினமாக்கியுள்ளது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தையும்  மற்றும் சிறிலங்கா நாடாளுமன்றம் ஒரு புதிய அரசியல்யாப்பை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தில்   நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும்  நடைமுறைப் படுத்துவதில்  சிறிலங்கா அரசாங்கம் ஈடுபாடு இல்லாமல் இருப்பதும் இந்த அரசாங்கம் வேறொரு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடக்கிறது என்பதைக் காட்டுகிறது” என திரு  சம்பந்தன் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளருமான  எம்ஏ சுமந்திரன்தற்போதுள்ள கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ((PTA) வரலாற்றை எடுத்துரைத்தார். “இந்தச் சட்டத்தைத்  திரும்பப் பெறுவது இந்த அரசாங்கம்  பன்னாட்டுச்  சமூகத்திற்கு உறுதியளித்த முக்கிய  வாக்குறுதிகளில் ஒன்றாகும்ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் வரைவு உள்ளதுஅது குறித்தும் எங்களுக்குச் சில கவலைகள் உள்ளனஆனால் அந்த வரைவு இப்போது விவாதிக்கப்படவில்லை” எஎ திரு  சுமந்திரன் கூறினார்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள்  1950 கள், 1960 கள், 1970 கள் மற்றும் 1980 களில் கட்டவிழ்த்துவிடப் பட்டன.   நாங்கள் எங்கள் உரிமைகளைக் கேட்கும்போது நாங்கள் கைது செய்யப்பட்டோம். வி.புலிகள்  தோற்றம் பெறாத  காலத்திற்கு முன்பே இந்த வன்முறைகள் தமிழ் மக்களுக்கு எதிராக  அரங்கேற்றப் பட்டன.  சிங்களத் தலைவர்கள் எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க மற்றும் டட்லி  சேனநாயக்க ஆகியோர் எங்கள் தலைவர் எஸ்.ஜே.வி.செலல்வநாயகம்  அவர்களுடன்  உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். ஆனால்  அவர்களால் அந்த  உடன்பாடுகளை நிறைவேற்ற  முடியவில்லை. வி.புலிகள்  வருவதற்கு முன்பே இந்த  வரலாற நடந்தேறின.  அந்த ஒப்பந்தங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தியிருந்தால்இந்த நாட்டில் ஒரு போர் நடந்திராது என திரு சம்பந்தன் குறிப்பிட்டார். (http://srilankabrief.org/wp-content/uploads/2019/06/IMG-3433.jpg)

எங்கள் உரிமைகளை அரசாங்கம்  தொடர்ச்சியாக  மறுப்பது ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இரண்டுக்கும்  எதிரானது.  இன்று இந்த நாட்டில் எங்கள் அனுமதியின்றி நாங்கள் ஆட்சி செய்யப்படுகிறோம்” என்று திரு சம்பந்தன் கூறினார். மேலும் இந்த நாட்டில் இன்னொரு போரை நாங்கள் விரும்பவில்லைபோரினால் நமது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லைஆனால் துர்ரதிட்ட வசமாக இந்த நாடு தீவிரவாதிகளினால் வழி நடத்தப்படுகிறது. சிங்களத் தலைவர்கள்  இந்த தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டுவரத் தயாராக இல்லை” என்று திரு சம்பந்தன் கூறினார்

திரு சுமந்திரன்இந்த நாட்டில் உள்ள இனக் குழுக்களுக்கு எவ்வாறு வித்தியாசமாக  சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதையும்  எப்படி சிங்கள- பவுத்த  தீவிரவாதம் அது  விரும்பியபடி  திட்டமிட்டு நடந்து கொள்ள இந்த நாட்டில் சட்ட அமலாக்க அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை  உதவிச்  செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும் பேசிய திரு சுமந்திரன்  “ஒரு பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாட்டின் கட்டமைப்பிற்குள் ஒரு அரசியல் தீர்வை நாங்கள் விரும்புகிறோம்இதைப் பெறாவிட்டால்தமிழ் மக்கள் தங்கள் நீண்டகால கோரிக்கைகள் குறித்து தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

சிறிலங்கா அரசாங்கம்  பன்னாட்டு சமூகத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவும்  அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதிலும்  பயனுள்ள மற்றும் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என  திரு சம்பந்தன் உதவி பொதுச் செயலாளரிடம் வலியுறுத்தினார்,

உதவிப்  பொதுச் செயலாளர் தனது பரிந்துரையில் தமிழ்த் தேசிய கூட்டணி தலைவர்கள் எழுப்பியுள்ள கவலைகள் சேர்க்கப்படும் என்று உறுதியளித்தார்.

உதவிப் பொதுச்  செயலாளர் உடன்  ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் செல்வி ஹனா சிங்கர்சட்ட அதிகாரி செல்வி அட்ரியா மற்றும் சிறப்பு உதவி செல்வி லயலா ஆகியோர் கலந்து கொண்டனர். (SRI LANKA BRIEF)

தமிழில் நக்கீரன்

Share the Post

You May Also Like