இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகினால் என்ன நடக்கும்? – பா.அரியநேத்திரன்

தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தாவிட்டால் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை இராஜனாமாசெய்யவேண்டும் என தேசியபட்டியல் பாராளுமன்ற யாழ்பாண பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.    இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கையில்  – தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் எனவும் இன்னும் சிலர் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் அவர்கள் விரும்பியபடி கருத்துக்களை கூறுகின்றனர். குறிப்பாக தேசியபட்டியல் யாழ்பாணம் ஶ்ரீலங்காசுதந்திர கட்சி பராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அனைத்து தமிழ் பாராளுமன்றஉறுப்பினர்களும் பதவி விலக முன்வந்தால் தாமும் விலகத்தயார் என கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் கடந்த தேர்தலில் தெரிவாகி தற்போது ஜனாதிபதி மைத்திரி ஆதரவு தளத்தில் உள்ளபாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் வேண்டுகோளை விடுத்திருந்தார். கல்முனையில் வைத்து கடந்த 22/06/2019,ல் அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரனும்ஒருவாரத்தால் பதவி விலகுவதாக கூறினார். யாரும் பதவி விலகுவதாக கூறலாம் அப்படி பதவி விலகினால் அந்த வெற்றிடங்களுக்குஇன்னுமொருவர் நியமிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்வது இது தொடர்பாக ஒரு தெளிவு எல்லோருக்கும் வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் 225, பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள்:அவர்களில் 29 பேர்  தேசியப் பட்டியல் உறுப்பினர்கள். மீதமான 196 பேரும்நேரடியாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து மக்களால் தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் என்பதை புரிதல் வேண்டும். தேசியபட்டியல் 29, பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது ஒருவர் பதவி விலகினால் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி செயலாளர் யாரை அந்தஇடத்திற்கு நியமிக்கலாம் என தீர்மானித்து பொருத்தமான ஒருவரை தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு பரிந்துரை செய்யும்போது அவரின்பெயர் வர்தமானியில் பிரசுரமாகி பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கலாம். உதாரணமாக தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்பாணம் அங்கஜன் இராமநாதன் தேசியபட்டியல் உறுப்பினர் இவர் யாழ்மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இல்லை அவர் பதவி விலகினால் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்த எவரையும் அவர் பிரதிநித்துவப்படுத்தும்ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி செயலாளர் தேர்தல் ஆணையகத்துக்கு எழுத்து மூலமாக பரிந்துரை செய்து நியமிக்கலாம். ஏனய 22,மாவட்டங்களிலும் விகிதாசார தேர்தல் முறையில் மக்களின் விருப்பு வாக்கு மூலம் தெரிவான 196, பாராளுமன்ற உறுப்பினர்களில்யாராவது ஒருவர் அந்த மாவட்டத்தில் பதவி விலகினால் அந்த கட்சியின் அடுத்த நிலையில் உள்ள உறுப்பினரை கட்சி செயலாளரின் அனுமதிஇன்றி தேர்தல் ஆணையாளர் வர்தமானியில் அவரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவிப்பார் அந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில்பதவிபிரமானம் செய்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கலாம். உதாரணமாக அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஷ்வரன் தமது பதவியை விலக்கி கொண்டால்அடுத்த நிலையில் உள்ள க.கலையரசன் பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல் ஆணையாளர் வர்தமானியில் அறிவிப்பார் இதற்கு கட்சிசெயலாளரின் அனுமதி தேவையில்லை, இதுதான் இலங்கை பாராளுமன்ற நடைமுறை உதாரணமாக வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால் 14, உறுப்பினர்கள் தேர்தல் மூலமாகவும் 02,உறுப்பினர்கள் தேசியபட்டியலில் இருந்தும் மொத்தமாக 16, பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதுஉண்டு.  இவர்கள் முழுமையாக பதவி விலகினால் 14,பாராளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் பட்டியலில் இருந்து தேர்தல்ஆணையகத்துக்கே உண்டு எஞ்சிய இரண்டு தேசியபட்டியல் உறுப்பினர்கள் மட்டுமே இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பரிந்துரைசெய்யலாம். ஒருபாராளுமன்ற உறுப்பினர் தமது பதவியில் இருந்து விலகுவதாயினமூன்று விதமாக பதவி துறக்கலாம் 1)தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்வதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேரடியாக பதவி விலகல்கடிதத்தை சமர்ப்பித்தல். 2)தொடர்ந்து மூன்றுமாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றாமல் இருத்தல். 3)பாராளுமன்ற உறுப்பினர் மரணித்தால் அல்லது காணாமல்போனால். இந்த மூன்று முறைகளில்  ஒன்றை மேற்கொண்டு பதவி விலக முடியும், ஊடகங்களில் அறிக்கை விடுவதால் விலகியதாக இல்லை….

யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தமிழரசுக் கட்சியின் மாநாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் மாதர் முன்னணி,…

அரசியலமைப்பை ஜனாதிபதி கேலிக் கூத்தாக்கக் கூடாது – செல்வம் எம்.பி.

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் பொறுமற்றது என்று ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு அவர் கூறினால் 19 ஆம் திருத்தத்தினால் என்ன பாதகம் ஏற்பட்டுள்ளது…

விடுதலையை வென்றெடுக்க கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – செல்வம் எம்.பி. வலியுறுத்து

“சகல கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.” – இவ்வாறு நாடாளுமன்றக் குழுக்களின்…

ஆனி 29,30ல் யாழில் தமிழரசின் 16வது தேசிய மாநாடு…

கடந்த 2019 ஏப்ரல் 26,27,28 களில் நடைபெற இருந்த நமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு, ஏப்ரல் 21ல் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு…

கல்முனை விவகாரம் போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் பிக்குகள் குரல்கொடுக்க வேண்டும் – ஸ்ரீநேசன்

கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலய பிரச்சினைக்கு குரல்கொடுத்ததுபோல, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகளையும் தீர்க்க பௌத்த மதகுருமார் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

நல்லிணக்கத்தை அடைவதிலும் பின்னர் அது நீடித்து இருப்பதை உறுதி செய்வதிலும் சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் எதிராகவே இருக்கின்றன – ததேகூ

செய்தி வெளியீடு / 10.06.19 ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு  சபையின் பயங்கரவாதக் குழுவின் நிர்வாக இயக்குநரும் (CTED) உதவிப் துணைப் பொதுச்செயலாளரும் ஆன  செல்வி  மைக்கேல் கோனின்க்ஸ் நேற்று (ஜூன் 8, 2019) கொழும்பில் தமிழ் தேசிய…

நாடாளுமன்ற ஆசனத்துக்காகவே கீழ்த்தர சொல் பாவிக்கும் விக்கி! சிறிநேசன் எம்.பி. விசனம்

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தான் பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். அதேவேளை விக்னேஸ்வரன் தனது முதிர்ச்சிக்கு பொருத்தமில்லாத “மாமா வேலை” போன்ற…

கல்முனை பிரதேச செயலகம் தரமுயராவிடின் பௌத்தம்’ அரசிடம் தோற்றதாகவே கருதப்படும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாகவே ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் என  கவீந்திரன் கோடீஸ்வரன்    தெரிவித்தார். கல்முனை…

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: தூரநோக்குடன் செயற்படும் கூட்டமைப்பு!

இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அடுத்த ஆட்சிக்கான பலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான போராட்டத்தினை பயன்படுத்துகின்ற செயற்பாடுகளை சில ஊடுறுவிகள் மேற்கொண்டு வருவதாக…