ஆவணப்படுத்தல் இல்லாமையினால் இந்துக்கள் அனைத்தையும் இழக்கின்றனர் – சரவணபவன்

ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தினால் இந்துக்கள் அனைத்தையும் இழந்து வருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று பழமைவாய்ந்த ஆலயங்களின் புகழ்பாடும் அருள்நிறை பதிகம் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எமது மதம்தான் கலை, கலாசாரம், பண்பாடு, அறிவியல், மெய்யியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இன்றும் எமது பல அறிவியல்கள் விஞ்ஞானிகளுக்கு சவாலாகவுள்ளது. தஞ்சை பெருங்கோயில் உட்பட பல இடங்கள் அவ்வாறு உள்ளன.

இவையெல்லாம் இழந்துபோனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக நாங்கள் ஒன்றையும் ஆவணப்படுத்துவதில்லை. ஆவணப்படுத்துவதையும் வெளிப்படுத்துவதில்லை. நாங்கள் அனைத்தையும் மூடி வைத்ததன் காரணமாக பல விடயங்களை நாங்கள் இழந்துவிட்டோம்.

இந்த நாட்டினை மதவெறியர்களின் தளமாக மாற்றும் வகையிலான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே எமது சரித்திர விடயங்களில், எமது பாரம்பரியங்களை பேணிப் பாதுகாக்கின்ற விடயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like