நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதிக்கு சாந்தி எம்.பி. 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட வவுனியா – மன்னார் வீதியையும், நெளுக்குளம் – நேரியகுளம் வீதியையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து வீதியாகிய நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதியினை கல்லிட்டுத் தார் வீதியாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் 2019 ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் ரூபா.4 மில்லியன் நிதி மேற்படி வீதி அமைத்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like