அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும் – ஸ்ரீதரன்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, தமிழ் மொழியில் பெயர் சூட்டவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர், மக்களுக்கு தீர்வும் இனப்படுகொலைக்கு நீதியும் வழங்கப்படாத நிலையில் மக்கள் வாழ்கின்றனர்.

மேலும் தமிழ் பகுதிகளில் வங்கிகள், நிறுவனங்கள்,  அபிவிருத்தித் திட்டங்களென அனைத்திற்கும் சிங்கள பெயர்களே சூட்டப்படுகின்றன.

சிங்களமயப்படுத்தப்பட்ட பெயர்கள் எல்லா இடங்களிலும் திணிக்கப்படுகின்றன. இதனை மாற்றியமைக்குமாறு இன நல்லிணக்க அமைச்சர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும் இதுவரையில் இதற்கான தீர்வு வழங்கப்படவில்லை” என மேலும் தெரிவித்தார்.

0Shares
Share the Post

You May Also Like