சாம்பல்தோட்டம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்காக 0.3 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடந்த 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக ஆலய பரிபாலனசபையின் கோரிக்கையின் பிரகாரம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் ரூபா.3,00,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் கோரிக்கைக்கிணங்க, வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட சாம்பல்தோட்டம் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்காக முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் கம்பரெலிய பகுதி 02 திட்டத்தின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like