போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

நக்கீரன்

இந்த ஆண்டு மார்ச் 20 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பேரவையில் பேசிய சிறிலங்கா  வெளியுறவு அமைச்சர் திலக் மாறப்பன அரசாங்கம் மே 2009 தொடக்கத்தில் 71,172.56 ஏக்கர் அரச காணி முப்படைகளின் வசம் இருந்ததாகச்   சொன்னார்.  இதில் மார்ச் 12 , 2019 வரை 63,257 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்பட்டுள்ளது. அதாவது 88.87 விழுக்காடு அரச காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மே 2009 தொடக்கத்தில் 28,215.29 ஏக்கர் தனியார் காணி முப்படைகளின் வசம் இருந்தது. இதில் மார்ச் 12, 2019  வரை 26,005.17 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்பட்டுள்ளது. அதாவது 92.16 விழுக்காடு தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.Image result for Valikamam North land release

ஆனால் நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் (Secretariat for Coordinating Reconciliation Mechanisms (SCRM) பிரசுரித்துள்ள தகவலின் படி முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 88,722 ஏக்கர் ஆகும். இது அமைச்சர் தெரிவித்த 71,172.56 ஏக்கர் காணியை விட  கூடுதலானது. எனவே அரசினால் மீள் கையளிக்கப்பட்ட அரச காணிகளின் விழுக்காடு 71.29 மட்டுமே.

கீழ்க்கண்ட அட்டவணை 1 மே 2009 – மார்ச் 12,  2019 க்கு இடையில் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் விபரத்தைக் காட்டுகிறது.

  • அட்டவணை 1

  • 1 மே 2009 –  மார்ச் 12,  2019  க்கு இடையில் விடுவிக்கப்பட்ட  அரச மற்றும் தனியார் காணிகள் –  நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்

  •   அரச காணிஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்தம் ஏக்கர்
    முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 88,722 29,531 118,253
மே 2009 தொடக்கம் மார்ச் 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 71.29% 88.06% 75.48%
விடுவிக்கப்படாத காணிகள் 25,464 3,526 28,990
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 28.71% 11.94% 24.52%

மூலம்: நல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்

அமைச்சர் மாரப்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அரச மற்றும் தனியார் காணிகள்  தொடர்பாக  தெரிவித்த தரவுகள் பின்வருமாறு

அட்டவணை 2

அமைச்சர் மாரப்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அரச மற்றும் தனியார் காணிகள் – அமைச்சர் மாரப்பன

  அரச காணி ஏக்கர் தனியார் காணி ஏக்கர் மொத்தம் %
முப்படைகளின் வசம் மே 2009 இல் இருந்த காணி 71,173 28,215 99,388
மே 2009 தொடக்கம் மார்ச் 2019 வரை முப்படைகளினால் விடுவிக்கப்பட்ட காணி 63,258 26,005 89,263
விடுவிக்கப்பட்ட காணிகளின் விழுக்காடு 88.87% 92.16% 89.81%
விடுவிக்கப்படாத காணிகள் 7,915% 2,210% 10,125
விடுவிக்கப்படாத காணிகளின் விழுக்காடு 11.13% 7.84% 10.19%

எனவே அரச காணிகள்  விடுவிக்கப்பட்ட விழுக்காடு 71.29 மட்டுமே. அமைச்சர்  மாரப்பன சொல்வது போல 88.87 விழுக்காடு அல்ல. அதே போல விடுவிக்கப்பட்ட தனியார் காணிகளின் விழுக்காடு 88.06 மட்டுமே. அமைச்சர் மாரப்பன சொல்வதுபோல 92.16 விழுக்காடு அல்ல.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 27.5 ஏக்கர் காணி இன்று (யூலை 12) உரியவர்களிடம் கையளிக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி தர்ஷன  ஹெட்டியாராச்சி இந்தக் காணியை வட மாகாண ஆளுநர் சுரேன் இராகவனிடம் கையளிக்க அவர் அதனை மேலதிக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் முரளீதரனிடம் கையளித்தார்.Image result for Valikamam North land release

இதன் மூலம் 2015 சனவரிக்குப் பின்னர் மொத்தம் 2,963 ஏக்கர் காணியை இராணுவம் மீள்கையளித்துள்ளது. உண்மையில் 2015 சனவரி தொடக்கத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் 6,381.5 ஏக்கர் காணி இராணுத்தின் பிடியில் இருந்தது. இதன் அடிப்படையில் மேலும் 3,418.5 ஏக்கர் காணி (53.54 விழுக்காடு ) இப்போதும் இராணுவத்தின் பிடியில் உள்ளது.

எனவே அமைச்சர் மாரப்பன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2,210 ஏக்கர் காணி மட்டும் விடுவிக்கப்படவில்லை என்று அமைச்சர் மாரப்பனா பேசியது தவறாகும். வலிகாமம் வடக்கில் மட்டும் 3,418.5 ஏக்கர் காணி இராணுவத்தின் பிடியில் உள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் உட்பட வட கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் தொடர்ந்து  முப்படைகளும் கையகப்படுத்தியுள்ள சரியான புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

வலி வடக்கில் இராணுவம் பாரிய பவுத்த விகாரையைக் கட்டி வருகிறது. பவுத்தர்கள் இல்லாத இடத்தில் பவுத்த விகாரைகள் பரவலாகக் கட்டப்பட்டு வருகின்றன. பவுத்த மயப்படுத்துவதில்  இராணுவம் கரிசனையோடு  கருமமாற்றுகிறது. சிறிலங்கா இராணுவத்தில் உள்ளவர்களில் 99 விழுக்காடு சிங்கள – பவுத்தர்கள் எனப் புளகாங்கிதம் அடைகிறார் இராணுவ தளபதி மகேஷ்  சேனநாயக்கா.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் இராணுவம் வசம் இருந்த 482 ஏக்கரில் 412 ஏக்கர் காணியை இராணுவம் விடுவித்து விட்டது.  எஞ்சிய 70 ஏக்கர் காணியின் சொந்தக்காரர்கள் அதனை விடுவிக்கக் கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு மாற்றீடாகக் கொடுத்த காணியில் குடியேற அவர்கள் மறுத்துவிட்டார்கள்.  இந்த 70 ஏக்கர் காணி 47 குடும்பங்களுக்குச் சொந்தமானது. இது அவர்களது பூர்வீக காணிகளாகும்.

கேப்பாப்புலவில் தனியார் காணிகளில் இராணுவம் பாரிய முகாம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதனைக் கைவிட இராணுவம் மறுத்து வருகிறது. இராணுவம் தனியார் காணிகளில் முகாம் அமைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.Image result for Valikamam North land release

சம்பூரில் கடற்படை 237 ஏக்கர் காணியில் முகாம் அமைத்திருந்தது. இந்தக் காணிகள் மொத்தம் 546 குடும்பங்களுக்குச் சொந்தமானது. கடற்படை பெருந்தன்மையோடு அந்தக் காணிகளை மக்களிடம் ஒப்படைத்துவிட்டு வேறு இடத்துக்கு முகாமை மாற்றிவிட்டது. கடற்படையைப் போல் இராணுவமும் இந்த 70 ஏக்கர் காணியில் உள்ள முகாமை வேறு இடத்துக்கு நகர்த்திவிட்டு அந்தக் காணியை அதன் சொந்தக்காரர்களிடம்  ஒப்படைக்வேண்டும். இதுவே காணிச் சிக்கலைத் தீர்ப்பதற்குச் சரியான தீர்வாக இருக்கும். 

போரினால் இடம்பெயர்ந்த அண்ணளவாக 40,000 பேர்  10 ஆண்டுகள் கழிந்தும்  தங்களது சொந்த இடத்துக்கு மீள்குடியேற முடியாது  அல்லல் படுகிறார்கள்.  இவர்களில் பெரும்பாலோர் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சார்ந்தவர்கள்.

குடிமக்களது சொத்துரிமை  அவர்களது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  சொத்து உரிமை என்பது ஒருவர் அல்லது ஒரு குழு நேர்மையான வழியில் உழைத்த சொத்துக்கான உரிமை ஆகும். சொத்தின் சொந்தக்காரர் அந்தச் சொத்தை நுகர, விற்க, வாடகைக்குவிட, பிறருக்கு கையளிக்க உரிமை பெறுகிறார் சுருக்கமாக சொல்லின் காசும்,காசாக மாறக்கூடிய் வளங்களும் சொத்து எனலாம்.

தன்துணை இன்றால் பகை இரண்டால் தானொருவன்
இன்துணையாகக் கொள்க அவற்றில் ஒன்று

சம்பந்தன் ஐயாவுக்கு எந்த உடல் நலக்கேடும் இல்லை. அவர் ஒரு நோயாளியைப் பார்க்கவே மருத்துவ மனை சென்றார். வலம்புரி  போன்ற கழிசடை ஏடு சம்பந்தன் ஐயாவுக்கு வயது போய்விட்டது. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என இலவச ஆலோசனை வழங்குகிறார்கள். இதே வலம்புரி ஆசிரியர் விக்னேஸ்வரனை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார். அவருக்கு என்ன இளைமை ஊஞ்சல் ஆடுகிறதா?

 

Share the Post

You May Also Like