இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.!

யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் விளையாட்டுவிழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

இளைஞர் சம்மேளனத் தலைவர் தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post

You May Also Like