நல்லூர் உற்சவம் தொடர்பில் மாநகர முதல்வரின் அவசர வேண்டுகோள்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந் திருவிழா 06.08.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

உற்சவகால முன்னாயத்தமாக 05.08.2019 மதியத்திலிருந்து 01.09.2019 நள்ளிரவு வரை வீதி தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வீதித்தடையின் போது வாகன போக்குவரத்துக்கான மாற்று பாதை ஒழுங்குகள் கடந்த ஆண்டுகளைப் போல இம்முறையும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆலய உற்சவ காலத்தில் சாதாரண காவடிகள் பிரதான வீதிகள் ஊடாக உட்செல்ல அனுமதிக்கப்படும். அதே நேரம் இம் முறை ஆலயத்துக்கு வரும் தூக்குக் காவடிகள், பறவைக்காவடிகள் என்பன பருத்தித்துறை வீதியூடாக மாத்திரமே உட்செல்ல அனுமதிக்கப்படும்.

அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப அடியார்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கி உற்சவத்தை சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற செய்யுமாறு அடியார்கள் அனைவருக்கும் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share the Post

You May Also Like