தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.

தமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ளது. கட்சிகள் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் யாரென அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தரப்பினரை இரகசியமாக சந்தித்தனர் என சிலர் புரளிகளை கிளப்பி வருகின்றனர். அவர்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். தேர்தல் என வரும்போது பல தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புக்களுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும்” என மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like