கள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு!

முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்பு  வேலைகளுக்காக அவ் கிராம மக்களின்  வேண்டு கோளுக்கு இணங்க இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் இணைப்பொருளாரரும்( அகில இலங்கை), மத்திய செயற்குழு உறுப்பினருமாகிய  அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் அவர்களின் சிபாரிசின் பேரில் வன்னி  பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமாகிய கெளரவ சி. சிவமோகன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து  இருபது இலட்சம் (2000000.00)  ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ் ஒதுக்கீடுக்கான அனுமதி கடித்தினை பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். ரூபன் அவர்களினால் 04.08.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டது.
Share the Post

You May Also Like