மாவையின் நிதியில் தீவகத்துக்கு மின்குமிழ்கள்!

தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் உப செயலாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு ஊடாக தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிகளுக்கு மின் விளக்குகள் ( 150 w LED ) பொருத்துவதற்கு ரூபாய் இருபது இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் திட்டமானது தமிழ் அரசுக் கட்சியின் வேலணை , புங்குடுதீவு – நயினாதீவு மூலக்கிளையினரின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .

இதன் ஆரம்ப கட்ட மின்விளக்குகள் பொருத்தும் நிகழ்வு இன்று (23/08/2019) மண்டைதீவு சந்தி. பொலிஸ் சோதனை சாவடியருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 
Share the Post

You May Also Like