தொல்புரம் மெதடிஸ்த ஆலய சுவர் அமைக்க சுமந்திரன் நிதி!

தொல்புரம் மெதடிஸ்த தேவாலய எல்லைச்சுவர் அமைத்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.

மேற்படி தேவாலயத்தினர் நாடாளுமன்ற உறுப்பினரின் வட்டுக்கோட்டை தொகுதி பிரதிநிதியாகிய சிவராஜா கஜனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொல்புரம் மெதடிஸ்த தேவாலயத்தில் வைத்து இந்த நிதிக்குரிய காசோலையை நாடாளுமன்ற உறுப்பினரின் வட்டுக்கோட்டைத் தொகுதிப் பிரதிநிதி சிவராஜா கஜன் இன்று தேவாலயத்தினரிடம் வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் வலி.மேற்கு பிரதேச செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினரின் மானிப்பாய் தொகுதி பிரதிநிதியும் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி  தலைவருமான தி.பிரகாஷ், வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன், வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜெயந்தன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

 

Share the Post

You May Also Like