நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மரநடுகை நிகழ்வில் முதல்வர் ஆனல்ட்

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை இன்று (26) யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைந்துள்ள புல்லுக்குளம் அருகாமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ் பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் திரு.ரணவீர, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் பிரதேச செயலர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like