யாழ் மாநகர முன்னரங்க அலுவலக திறப்பு விழாவில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு

ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட யாழ் மாநகர முன் அரங்கு அலுவலகம் (வாடிக்கையாளர் சேவை நிலையம்) இன்று(26) யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் ஆனல்ட் அவர்கள் நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், இச் சேவை நிலையத்தில் மாநகர மக்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய சேவைகள், இக்கட்டிடத்திற்கான நிதி பங்களிப்பை செய்த நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் இவ்வலுவலகத்தில் பணிபுரிகின்ற அலுவலர்கள் மக்கள் நேரடியாக தங்களை தொடர்பு கொள்கின்றமையினால் எவ்வாறு அவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும், மக்களின் தேவைகளை மனிதத்தோடு நிறைவேற்றுவதில் உள்ள வெற்றி உ;ள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக விசேட உரை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார்.

இந் நிகழ்வில்  திரு.கோபா குமார் தம்பி (பணிப்பாளர் – பொருளாதார ஆளுகை, ஆசிய மன்றம்), ஆசிய மன்றத்தின் உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர பிரதி முதல்வர், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், திணைக்கள தலைவர்கள், மாநகர உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கட்டிடத்திற்கான நிதியை ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத்திணைக்களம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post

You May Also Like