விக்கி, அனந்தி சம்பளத்துக்கு ஆப்பு வைத்தார் டெனீஸ்வரன்!

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோரின் கொடுப்பனவுகள் மாகாணத் திறைசேரிக்குச் செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நீதிமன்றத் தீர்ப்பின்படி 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் ஒரு சட்டவலுவற்ற அமைச்சரவை வாரியத்தை முதலமைச்சர் கொண்டு நடத்தியுள்ளார். சட்டவலுவற்ற அமைச்சரவை வாரியத்தைச் சேர்ந்த முதலமைச்சரும், அனந்திசசிதரனும், சிவனேசனும் எவ்வாறு அமைச்சரவைச் சம்பளத்தைப் பெறமுடியும்?

அடுத்தகட்ட நடவடிக்கையில் நான் இறங்க இருக்கின்றேன். ஒரு வலுவற்ற அமைச்சரவைச் சம்பளத்தை எடுக்க உரித்தற்றவர்கள், எடுத்திருக்கின்ற சம்பளம் உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் மாகாணத் திறைசேரிக்குச் செல்லவேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் எடுக்கவேண்டும். – என்றார்.

Share the Post

You May Also Like