வேலணை விளையாட்டு கழகங்களுக்கு சராவால் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மதியம் இரண்டு மணியளவில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அண்மையிலுள்ள தீவக கிரிக்கெட் கழகத்தின் அலுவலகத்தில் சிறப்பாக இளைஞர்கள் மத்தியில் நடைபெற்றது.

தமிழ் அரசு கட்சியின் தீவக வாலிப முன்னணி தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ் அரசுக் கட்சியின் துணைத்தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமாகிய  ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களால் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிதியம் ஊடாக ( Ridp ) ரூபாய் பத்து இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்நிகழ்வில்பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கலந்து சிறப்பித்து இளைஞர்கள் மத்தியில் சில கருத்துக்களை முன்வைத்தார். மேலும் பல உதவிகளை தீவு பகுதிக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.பின்னர் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு புதிய சுதந்திரன், தமிழ்.சி.என்.என். நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சூழக இயக்குநரும் வேலனை பிரதேசசபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் வசந்தகுமார், யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவக வாலிபர் முன்னணி தலைவர் கருணாகரன் குணாளன், வைத்தியர் லயன் ஜெயச்சந்திரமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் செ.பிரதாப், புங்குடுதீவு நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் சுப்ரமணியம் கருணாகரன். வேலணை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்து விளையாட்டு உபகரணங்களை கழகங்களுக்கு வழங்கி வைத்தனர்.

Share the Post

You May Also Like