விக்கி இரு தோணிகளில் கால்!

இலங்கைத் தமிழர்களின் அரசியல் செல்நெறி ஓர் இக்கட்டான  காலகட்டத்தில் நகர்ந்தபோது இங்கு உதித்ததே “தமிழ் மக்கள் பேரவை‘.  

அதன் வரலாற்றுப் பிறப்பாக்கம்செயற்போக்குதற்போதைய நிலைமை குறித்தெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் நீடிக்கின்றன.

அதன் சுயாதீனத் தன்மை குறித்து இப்போது கேள்விகள் பலவாறாக எழுப்பப்படுகின்றன.

நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது அவரைச் சுற்றி மையமாக வைத்தே பேரவை எழுந்தது.

அதில் பல்வேறு பிற திறத்தாரும் ஆரம்பம் முதலே பின்னிப் பிணைந்து இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும் அதன் மைய விசையாக – அதன் அச்சாக  – செயற்பட்டு வருபவர் நீதியரசர் விக்னேஸ்வரன்தான்.

ஆனாலும் அந்தத் தமிழ் மக்கள் பேரவையை ஓர் அரசியல் கட்சியாக – அல்லது கட்சி சார் அரசியல் சக்தியாக – மாற்றுவதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் உடன்பட்டிலர்அதைத் தனித்துவமாக ஒரு மக்கள் இயக்கமாக முற் கொண்டு செல்ல வேண்டுமே ஒளிய, அது ஓர் அரசியல் கட்சியின் செயற்கிளையாக மாறக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வருபவர் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன்.

ஆனால்அப்படிக் கூறிக்கொண்டு அதை ஓர் அரசிய கட்சியின் முகமாகக் காட்டத் தக்க விதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரனே செயற்படுகின்றார் என ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் பேரவைக்குள்ளிருந்தே கிளம்பியிருக்கின்றதுநீதியரசர் விக்னேஸ்வரன் விரைந்து அவதானித்து தம்மைத் திருத்த வேண்டிய விடயம் இது என்று கருதுகிறோம்.

தமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபித்துஅதன் இணைத் தலைமையை ஏற்ற காலத்தில் இருந்துபேரவை தொடர்பில் அவர் திரும்பத் திரும்ப ஓதும் ஒரே மந்திரம் உண்டுஅது, “பேரவை மக்கள் இயக்கம்அது அரசியல் கட்சியாகச் செயற்படாது‘ – என்பதுதான்.

தாம் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்யும் அந்த மந்திரத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் உண்மையாக இருக்கின்றாரா என்பதே இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் வினாவாகும்.

தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்லஒரு மக்கள் இயக்கம் என்று கூறிக் கொண்டுதான்அந்த மக்கள் இயக்கத்தின் பகிரங்கக் கூட்டத்தைக் கூட்டிஅந்தக் கூட்டத்தில் வைத்து தமது புதிய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பையும்அது தொடர்பான விவரங்களையும் பகிரங்கமாக அறிவித்தார் விக்னேஸ்வரன்.

நீதியரசர் விக்னேஸ்வரன். (நீதியரசரே கூறுகின்றமை போல இது கட்சி சாரா மக்கள் இயக்கமாயின்அதன் கூட்டத்தை கூட்டிஅதில் புதிய கட்சி ஆரம்பிக்கின்றமை பற்றிய அறிவிப்பை விடுத்து கட்சி அரசியல் செய்தமை தவறு)

தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்தவர்களாகச் சேர்வதற்குப் பொதுமக்கள் கொடுத்த விண்ணப்பப் படிவங்களில் இருந்து,அவர்கள் பற்றிய தகவல்கள்மின்னஞ்சல் முகவரிகள் போன்றவற்றைப் பெற்று,அந்த முகவரிகளுக்கு தமது கட்சியில் சேர்வதற்கான அழைப்புகளையும் விண்ணப்பப் படிவங்களையும் பேரவையின் இணைத் தலைவரான விக்னேஸ்வரன் அனுப்பி வைத்தமைஅவர் பேரவையை அரசியல் கட்டமைப்பாகவே பயன்படுத்துகின்றார் என்பதற்கு ஆதாரபூர்வமான நல்ல சான்று.

இப்போதுதமது புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திய பின்னர்அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் அதேசமயம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகவும் இருந்து கொண்டுதமது கட்சிக்கு அரசியல் பலம் தரக்கூடிய நோக்கம் கொண்ட “எழுக தமிழ்‘ என்ற ஒரு நிகழ்வை தாம் இணைத்தலைவராக இருக்கும் பேரவைமூலம் நடத்த முயல்கின்றார் அவர்.

போதாக்குறைக்கு, “எழுக தமிழ்‘ நிகழ்வை ஏற்பாடு செய்வது “தமிழ் மக்கள் பேரவை‘ என்ற மக்கள் இயக்கமே எனவும் அது அரசியல் கட்சி சார்ந்த கட்டமைப்பு அல்ல எனவும் கூறிக் கொண்டுஅந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளஎழுக தமிழ்‘ நிகழ்வுக்கு ஆதரவு தாருங்கள் என்று பேரவையின் முக்கிய பிரதிநிதிகள் சிலர் மாவை சோனாதிராசாவைப் போய்ச் சந்தித்துக் கோரியிருக்கின்றார்கள் என்றும் தகவல்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அடித்துக் கூறுகின்றமை போல, தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கம் மட்டுமேஅரசியல் கட்சி அல்ல என்பது உண்மையானால் – அந்தத் தகுதி நிலையைப் பேரவை தொடர்ந்து பேணுவதற்காக – இப்போது ஓர் அரசியல் கட்சியைத் ஸ்தாபித்துஅதன் செயலாளர் நாயகமாகத் தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரன்தனது கட்சிகள் சார் நிலையைக் கருத்தாகக் காட்டிஅதனடிப்படையில் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களான சுரேஷ்சித்தார்த்தன் போன்று சாதாரண உறுப்பினராகப் பேரவையில் அவர் இடம் பெறலாம்.

அதைவிட்டுபேரவை இணைத் தலைவர்கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இரு தோணிகளில் ஒரே சமயத்தில் கால் வைக்கும் எத்தனத்தில் அவர் தொடர்ந்து ஈடுபடுவாராயின் அதைவிட மோசமான செயல் வேறு இருக்கமுடியாது எனலாம். (நமது பார்வை – காலைக்கதிர்)

Share the Post

You May Also Like