மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் சாணக்கியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சிறிநேசன்

தற்போதைய சூழலில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் சாணக்கியமாகவும், அமைதியாகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதான தபால் திணைக்களத்தின் தேவை கருதி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் ஒரு தொகுதி கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின்கீழ் இரண்டு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் இந்த கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தபால் மா அதிபர் சி.அருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் து.மதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொள்வனவு செய்யப்பட்ட கணினி தொகுதிகள் இதன்போது தபால் திணைக்கள அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஞா.சிறிநேசன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தம் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் பிரச்சினைகளை கையாளும்போது, ஆறாவது அறிவை பயன்படுத்த வேண்டும் எனவும் மிகவும் சாணக்கியமாகவும் அமைதியான முறையிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like