சாவ.இந்துவுக்கு சரவணபவன் எம்.பியால் திறன் வகுப்பறை!

சாவகச்சேரி இந்துஆரம்ப பாடசாலைக்கு திறன் வகுப்பறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ரூபா 4 லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விசேட நிதியின் மூலமே இந்த திறன் வகுப்பறைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கடும் முயற்சிகளால் யாழ்.மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கும் திறன் வகுப்பறை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share the Post

You May Also Like