ஹாட்லியின் தொழிநுட்ப கூடத்தை திறந்து வைத்தார் சுமந்திரன் எம்.பி.!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று 500 பாடசாலைகளுக்கு புதிய ஆய்வுகூட தொழில்நுட்ப கூடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

அந்தவகையில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 600 லட்சம் ரூபா செலவில் அiமைக்கப்பட்ட புதிய மூன்றுமாடிக் கட்டடத்தை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் திறந்துவைத்தார்.

கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அமைச்சைச் சார்ந்தவர்கள், கல்வித் திணைக்களத்தைச் சார்ந்தவர்கள் எனப் பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர்.

Share the Post

You May Also Like