காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் 20 மில்லியன் நிதி பளை பிரதேச அபிவிருத்திக்கு தவிசாளர் சுரேன் தெரிவிப்பு

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமூக அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை உற்பத்தி நிலையத்தின் மூலம் வருடாவருடம் சமூக பணிக்கான நன்கொடையாக மாகாணசபைக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்படுவதும் அது வடக்கு மாகாணத்தின் பகுதிகளுக்கு அபிவிருத்தி வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டும் வந்தது.
இருந்தபோதும் பச்சிலைப்பள்ளி பிரதேசம் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை வருமானத்தில் மிகக் குறைந்ததாக காணப்படுவதாலும் பிரதேச அபிவிருத்தியை மிகவும் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளினை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்கள் பல்வேறுபட்ட தரப்பினரிடம் முன்வைத்தார் இதன் தொடர் நடவடிக்கையாக குறித்த இருபது மில்லியன் ரூபாய்களையும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளை புனரமைப்பதற்காக  மாகாணத்தின் முதன்மை செயலாளரின் அனுமதி பெறப்பட்டதை  தொடர்ந்து குறித்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .
இதுதொடர்பாக தவிசாளர் இடம் கருத்துக்களை கேட்ட போது இதுவரை காலமும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு குறித்த நிதி பயன்படுத்தியதாக தெரியவில்லை ஆனாலும் எமது சபையின் மூலம் மாகாண அதிகாரிகளுடனும் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி எமது நியாயப்பாடுகளைக் கூறி குறித்த நிதியை நாம் பெற்றுள்ளோம் தொடர்ச்சியாக இந் நிதி எமது பிரதேசத்திற்கே பயன்படுத்தப்படும் என்றார்.
Share the Post

You May Also Like