தமிழ்த்தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்பவருக்கே ஆதரவு! என்கிறார் சி.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர்மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான தெரிவுகள் அறிவிக்கப்படவில்லை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான முடிவுகளே உள்ளன. சரியான தெரிவுகள் அறிவிக்கப்பட பின்னரே எமது முடிவுகள் வெளிவரும்

குறிப்பாக தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய குறிப்பாக தமிழ்த்தேசிய இனம் தன்னுடைய கலை கலாசாரம் நிலம் மதம் அரசியல் உரிமை என்பனவற்றை கட்டமைப்புசார்ந்து பிரிக்கப்படாத நாட்டுக்குள் சுயாட்சி முறையில் செயற்படுத்த வேண்டும் என்பதை யார் உறுதிப்படுத்துகிறார்களே அதனை யார் தெற்கிலும் கூறுகிறார்களே அவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையில் தான் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் இதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்துரையாடி முடிவுகளை எடுக்கும் என்றார்.

Share the Post

You May Also Like