அபிவிருத்திக்குக் காரணம் அரசுக்கான எமது ஆதரவே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்தை கவிழ்த்து சதி நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை முறியடிக்கும் வகையில் ஜனநாயகம் சார்பாகவும் அரசியல் யாப்பு சார்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

அதன் காரணமாகவே சில அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக எங்களிடம் ஆலோசனைகளைப் பெற்று, அவர்கள் முன்னெடுக்கின்றனர். அதற்கமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.

Share the Post

You May Also Like