ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்: தெரிவு கூட்டமைப்பின் கைகளில்!

அவர்களிடம் பேசுங்கள்
சஜித்துக்கு ரணில் செக்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது. ஆகவே அவர்களுடன் கட்டாயம்பேச்சு நடத்துங்கள் என சஜித்துக்குப் பிரதமர் ரணில் ஆலோசனை கொடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, எரான் விக் கிரமரத்ன, ஹர்டிசில்வா ஆகியோர் ஆரம்பப்பேச்சுக்களில் பங்கேற்கவில்லை . ரணில், சஜித், ராஜித ஆகியோரே முதலில் மூடிய அறைக்குள் பேச்சு நடத்தினர்.

இறுதிக் கட்டத்தில் ஏனையோர் உள்ளே அழைக்கப்பட்ட டனர்.

பிரதமர் ரணிலைச் சந்திக்க முன்னர் சஜித் தரப்பினர் நிதி யமைச்சில் ஒன்றுகூடி என் னென்ன விடயங்கள் பற்றிப் பேசுவதென ஆராய்ந்தனர். ஆனால் அந்தச் சந்திப்பு குறித்து தகவல் முன்கூட்டியே ரணிலுக்குச் சென்றதால் அவர் வந்த அனைவரையும் பேச்சில் பங்கேற்கச் சம்மதிக்க வில்லை .

நிதியமைச்சில் நடந்த பேச்சு பற்றிய தகவலைத்தாம் அறிந் துள்ளார் என சஜித்துடனான சந்திப்பில் சூசகமாகத் தெரிவித் தார் ரணில்.

முக்கியமான பல விடயங் கள் – குறிப்பாகத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு, நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு குறித்து சிறு பான்மை இனக்கட்சிகளுடன் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புட நீங்கள் பேச் வேண்டும். கூட்டமைப்புடன் பேசாமல் அவர்களின் இணக் கம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த காலங்களில் தீர்வு விடயத்தில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்களைப் பகைத்துத் தமிழரின் ஆதரவைப் பெறமுடியாது என்று ரணில் சஜித்திடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை – ஏற்கனவே சஜித்துடன் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரமுகர்கள், இனப்பிரச் சினைத் தீர்வு விடயத்தில் சஜித் தின் கொள்கை தெளிவற்று உள்ளதால் எழுத்து மூல உத் தரவாதம் ஒன்றை அவரிடம் கோர உத்தேசித்துள்ளதாக அறிய முடிந்தது.

ஆனால் அப்படி ஒரு உத்தரவாதத்தைக் கொடுத்தால் அது தென்னிலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கருதும் சஜித், அதற்கு இணங்க மாட்டார் எனக் கூறப்படுகின் றது.

இதனால் – கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுமாறு ரணில் வைத்த யோசனை, சஜித்துக்கு வைக்கப்பட்ட பொறி எனரணிலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

Share the Post

You May Also Like